சுடச்சுட

  

  அரசுப் பள்ளிகளில் ரூ. 1,200 கோடியில் கழிவறைகள்: செங்கோட்டையன்

  By DIN  |   Published on : 14th July 2019 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ரூ. 1200 கோடி மதிப்பில் கழிவறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சனிக்கிழமை  இரவு கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். அவருக்கு தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே, எஸ்.பி. ஸ்ரீநாத், அதிமுக மாவட்டச் செயலர்கள் எஸ். ஏ. அசோகன், ஜாண்தங்கம் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.  பின்னர், கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது: இந்தியாவே வியக்கும் வகையில் தமிழக அரசு பிற 
  மாநிலங்களை விட அனைத்துத் துறைகளிலும் முன்னோடியாகத் திகழ்கிறது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளி கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
  குறிப்பாக எல்.கே.ஜி, யூ.கே.ஜி. வகுப்புகளின் மூலம் தமிழ் மொழியோடு ஆங்கிலத்தையும் எளிதில் கற்கும் வகையில் பாடம் நடத்தப்படுகிறது. அடுத்த கல்வி ஆண்டில் இருந்து மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்கப்படும். எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவது குறித்து முதல்வர் ஆலோசனை செய்து வருகிறார். மேலும் தனியார் பள்ளிகளை விட சிறந்த முறையில் சீருடை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் இதுவரை 54 லட்சத்து 62 ஆயிரம் மாணவர்களுக்கு 
  மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையில் எந்த குறையும் இல்லை. தமிழகத்தில் அரசுப் பள்ளி எதுவும் மூடும் நிலையில் இல்லை. சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி வரலாறு குறித்து பாடத்திட்டத்தில் உள்ள குறைகள் அடுத்த கல்வியாண்டில் சரி செய்யப்படும். நீட்தேர்வில் இருந்து 100 சதம் விலக்கு வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai