சுடச்சுட

  

  கர்நாடக மாநில ஆட்சியைக் கவிழ்க்கமுயலுவது ஜனநாயகப் படுகொலை

  By DIN  |   Published on : 14th July 2019 04:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடக மாநில ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பது ஜனநாயக படுகொலை என்றார் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஹெச். வசந்தகுமார்.
  கர்நாடகத்தில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு வரும் பாஜகவை கண்டித்து, நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம் முன் காங்கிரஸ் கட்சி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பின்னர்,  வசந்தகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
  பாஜக அரசுக்கு அடிமைப்பட்டு போனால், அவர்கள் வாழவைப்பார்கள். எதிர்த்தால் குரலை ஒடுக்குவார்கள். இதுதான் பாஜகவின் கொள்கையாக உள்ளது. கர்நாடகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பது ஜனநாயக படுகொலை. அங்கு ஆளும் காங்கிரஸ் ஆட்சியை பாஜகவால் ஒருபோதும் கவிழ்க்க முடியாது.
  நாடு முழுவதும் பாஜக  ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் முறையான திட்டங்கள் அமல்படுத்தப்படாமல், போதிய நிதியும் ஒதுக்காமல் உள்ளனர். இது ஜனநாயக படுகொலை.  ஜனநாயகத்தை காப்பாற்றாத மோடி அரசு ஒருபோதும் தொடரப்போவது இல்லை. தற்போது கர்நாடகத்தில் இருக்கும் காங்கிரஸ் அரசை கவிழ்க்க வேண்டும் என பிரதமர் மோடி வேலை செய்கிறார். ஆனால், அது ஒருபோதும் வெற்றி பெறாது. ஆட்சியை கலைக்கும் செயலை காங்கிரஸ் கட்சி செய்யாது என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai