சுடச்சுட

  


  மூன்றடைப்பு அருகே சனிக்கிழமை இடி தாக்கி,  மின்னல் பாய்ந்ததில் 7 ஆடுகள் இறந்தன. 
  மூன்றடைப்பு அருகே உள்ள பூலம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன்.  இவர், ஆடுமேய்க்கும் தொழில் செய்து வருகிறார். வழக்கம் போல் பூலம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் இவர், ஆடு மேய்த்துக்கொண்டிருந்தாராம்.  அப்போது லேசான தூறல் பெய்துகொண்டிருந்ததாம்.  திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கியது.  அப்போது  மின்னல் பாய்ந்ததில் முருகனுக்குச் சொந்தமான 7 ஆடுகள் உடல் கருகி இறந்தன. 
  இதுகுறித்து  நான்குனேரி வட்டாட்சியர் ரஹ்மத்துல்லா விசாரணை நடத்தி வருகிறார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai