சுடச்சுட

    

    விசைப்படகுகளுக்கு அனுமதி வழங்கிய அரசுக்கு மீனவர்கள் பாராட்டு

    By DIN  |   Published on : 14th July 2019 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க அனுமதித்த தமிழக அரசுக்கு கன்னியாகுமரி ஊர் மக்கள் சார்பில் சனிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
    கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்களுக்கும், திருநெல்வேலி மாவட்டம், கூத்தங்குழியைச் சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்களுக்குமிடையே , கடலில் மீன்பிடித்துகொண்டிருந்தபோது  மோதல் ஏற்பட்டது. இதில், கூத்தங்குழியைச் சேர்ந்த மீனவர் டிலைட் (50) என்பவர் கடலில் விழுந்து உயிரிழந்தார். பலர் பலத்த காயமடைந்தனர். 
    இதனால், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கிடையே பதட்டமான சூழல் நிலவியது. இதனிடையே, குமரி மாவட்ட மீனவர்களை கண்டித்து திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதையடுத்து சின்னமுட்டம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றால் பிரச்னை எழ வாய்ப்புள்ளதால், மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை உத்தரவிட்டது.
    இத்தடையால் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடந்த ஒரு வார காலமாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.  தடையை விலக்க வேண்டும் என விசைப்படகு மீனவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து சின்னமுட்டம் மீனவர்கள் வெள்ளிக்கிழமையில் இருந்து மீன்பிடிக்கச் செல்கின்றனர்.
    இந்நிலையில் மீனவர்களின் பிரச்னைக்கு சுமுக தீர்வு கண்ட அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கன்னியாகுமரி ஊர் மக்கள் சார்பில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரத்தை சந்தித்து, கன்னியாகுமரி பங்குத்தந்தை ஜோசப் ரொமால்ட், பங்குப்பேரவை துணைத் தலைவர் நாஞ்சில் ஏ.மைக்கேல் விசைப்படகுகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பாராட்டுத் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai