Enable Javscript for better performance
ஊரக வளர்ச்சிப் பணியாளர்கள் பணி புறக்கணிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சங்கத் தலைவர் பணிநீக்கத்தை கண்டித்து, நாகர்கோவிலில் ஊரக வளர்ச்சிப் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் ஓய்வுபெறும் நாளில் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதை கண்டித்தும், மாநிலத் தலைவரை பணி ஓய்வு பெற்றதாக அறிவிக்கக் கோரியும், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து, போராட்டத்தில் பங்கேற்றனர். இதேபோல, மாவட்டம் முழுவதும் உள்ள 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    பூதப்பாண்டியில் உள்ள தோவாளை ஒன்றிய அலுவலகம் முன் அமர்ந்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஊராட்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் என 41 பேர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai