Enable Javscript for better performance
கருங்கல் அருகே பைக் மோதி மூதாட்டி பலி- Dinamani

சுடச்சுட

    

    கருங்கல் அருகே ஆலஞ்சியில் பைக் மோதியதில்  மூதாட்டி செவ்வாய்க்கிழமை இறந்தார்.
    கன்னியாகுமரி சுசீந்திரம் மேலதெரு பகுதியைச் சேர்ந்த பட்டன் மனைவி ஆவுடையம்மாள் (80).  இவர், ஆலஞ்சி பகுதியில் முறுக்கு வியாபாரம் செய்துவந்தார். செவ்வாய்க்கிழமை ஆலஞ்சி பகுதியில் சாலையின் குறுக்கே சென்றபோது,  எதிரே வந்த பைக்  மூதாட்டி மீது மோதியதாம். உடனே,  அப்பகுதியினர் மூதாட்டியை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார்.
    இதுகுறித்து கருங்கல் போலீஸார் வழக்குப் பதிந்து,  ஆலஞ்சி பகுதியைச்  சேர்ந்த ஜலஸ்டின் மகன் அமலனை (23)  கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai