Enable Javscript for better performance
குமரி அருகே குளத்தில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை மாயம்- Dinamani

சுடச்சுட

    

    குமரி அருகே குளத்தில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை மாயம்

    By DIN  |   Published on : 25th July 2019 06:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி அருகே புதன்கிழமை குளத்தில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் அம்மன் சிலை திடீரென மாயமானது. 
    கன்னியாகுமரியை அடுத்த பெருமாள்புரம் பிள்ளையார்குளத்தில் மீன்பிடிப்பதற்காக மீனவர்கள் வலை விரித்தனர்.  அப்போது வலையில் 2அரை அடி உயரம் கொண்ட  அம்மன் சிலை ஒன்று சிக்கியுள்ளது. 
    சிலையை கரையில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிலரிடம் மீனவர்கள் கொடுத்தனராம். அதை வாங்கியவர்கள் அருகில் உள்ள கோயிலில் வைத்து பூஜை செய்துள்ளனர்.
    இந்தச் சிலை ஐம்பொன்னால் செய்யப்பட்டது என்பது தெரியவந்ததும்,  சிலை கோயிலில் இருந்தால் பாதுகாப்பு இல்லை என்று பூஜை செய்தவர்கள் வீட்டுக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஐம்பொன் சிலை மாயமானது குறித்து,  சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் மற்றும் கன்னியாகுமரி போலீஸார் இணைந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai