Enable Javscript for better performance
குமரி பகவதியம்மன் கோயிலில்  ரூ. 5 லட்சம் உண்டியல் வசூல்- Dinamani

சுடச்சுட

    

    குமரி பகவதியம்மன் கோயிலில்  ரூ. 5 லட்சம் உண்டியல் வசூல்

    By DIN  |   Published on : 25th July 2019 06:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில்  புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கை மூலம் ரூ. 5 லட்சத்து 7 ஆயிரத்து 393 வசூலாகக் கிடைத்தது.
    கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை மற்றும் நேர்ச்சை செலுத்துவதற்காக17 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் மாதம்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.  
    இந்த மாதத்துக்கான உண்டியல் எண்ணும் பணி மாவட்ட தேவசம் போர்டு இணை ஆணையர் ம. அன்புமணி தலைமையில் நடைபெற்றது. உதவி ஆணையர் ரெத்தினவேல் பாண்டியன், முதுநிலை கணக்கர் இங்கர்சால்,  கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் மேலாளர் ஆறுமுகநயினார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. 
    இதில் ரூ. 5 லட்சத்து 7 ஆயிரத்து 393 ரொக்கமாகவும்,  10.75 கிராம் தங்கம், 17 கிராம் வெள்ளியும் மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் கிடைத்தன. உண்டியல் எண்ணும் பணியில் பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் தன்னார்வத் தொண்டர்கள் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai