Enable Javscript for better performance
குமரி மாவட்ட சிஐடியூ மாநாடு தக்கலையில் நாளை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    குமரி மாவட்ட சிஐடியூ  மாநாடு தக்கலையில்  வெள்ளிக்கிழமை (ஜூலை 26) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.
    இதுகுறித்து, சிஐடியூ மாவட்டச் செயலர் கே.தங்கமோகன்  நாகர்கோவிலில் புதன்கிழமை செய்தியாளர்ரளுக்கு அளித்த பேட்டி: குமரி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை உருவாக்க வலியுறுத்தி தக்கலையில் ஜூலை 26, 27, 28 ஆகிய  தேதிகளில் சிஐடியூ மாநாடு நடைபெறுகிறது. 
    குமரி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை உருவாக்க இயற்கையோடு இயைந்த தொழில்களை உருவாக்க வேண்டும். பெரிய தொழில் நிறுவனங்களை கொண்டு வந்து இயற்கைவளங்களை அழிக்காமல், கயிறு, தேன், விவசாயம் உள்ளிட்ட சிறு குறு தொழில்களை உருவாக்குவதுடன், தகவல் தொழில்நுட்ப பூங்கா போன்ற இயற்கையை அழிக்காத தொழில்களை மாவட்டத்தில் உருவாக்க வேண்டும். 
    ஏற்கனவே அழியும் தருவாயில் உள்ள முந்திரி, ரப்பர் தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மாநாட்டில் முன்வைக்கப்படுகிறது.
    ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்துகொள்ளும் பேரணியும், தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது.  
    பொதுக்கூட்டத்தில் சிஐடியூ மாநிலத் தலைவர் அ.சௌந்தரராஜன், மாநில பொதுச்செயலர் ஜி.சுகுமாரன், முன்னாள் எம்எல்ஏ எஸ்.நூர்முகமது, மாநிலச் செயலர் ஆறுமுகநயினார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
    முன்னதாக 25 ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து கொடி பயணமும், களியலில் இருந்து கொடிமரப் பயணமும், கொல்லங்கோட்டில் இருந்து கொடிக்கயிறு பயணமும்,  மாத்தூரில் இருந்து தோழர் ஜெ.ஹேமச்சந்திரன் நினைவுச் சுடரும்,  வடக்கு தாமரைகுளத்தில் இருந்து தோழர் பி.பெருமாள் நினைவுச் சுடரும், வெட்டுமணியில் இருந்து தோழர்கள் ஜி.எஸ்.மணி,  டி.மணி நினைவுச் சுடரும், செறுகோலில் இருந்து தோழர் திவாகரன் நினைவுச் சுடரும், திக்குறிச்சி யில் இருந்து தோழர் பொன்.வசந்தன் நினைவுச் சுடரும் ஜோதி பயணமாகவும் தொடங்கி தக்கலையை வந்தடைகிறது என்றார் அவர். 
    பேட்டியின்போது,  மாவட்டத் தலைவர் பி.சிங்காரன், நிர்வாகிகள் ஐடா ஹெலன், சந்திரபோஸ், எஸ்.அந்தோணி, பொன்.சோபானராஜ், ஸ்டீபன் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai