Enable Javscript for better performance
நாகர்கோவிலில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
    இதுகுறித்து, குமரி மாவட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர்(பொ) ம. மரியசகாய ஆண்டனி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகர்கோவிலில்  உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) காலை 10  மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 
    இம்முகாமில், கன்னியாகுமரி  மாவட்டம் மற்றும் பிற மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
    இதில், 10ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு,  டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம்.
    இதில்,  கலந்து கொள்ள விருப்பமுள்ள குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பதிவுதாரர்கள் 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வருகை தந்து பயனடையலாம்.  
    தனியார் துறையில் வேலைக்கு தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவுமூப்பு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai