Enable Javscript for better performance
நாளை 6 வட்டங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 வட்டங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 26)  நடைபெறுகிறது.
    இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட  செய்திக் குறிப்பு:
    தமிழக அரசின் அம்மா திட்ட 5  ஆம் கட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) குமரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் நடைபெறவுள்ளது.
    அகஸ்தீசுவரம் வட்டத்தில் மதுசூதனபுரம் வடக்கு கிராமத்துக்கு குளத்துவிளை அரசு தொடக்கப் பள்ளியிலும், தோவாளை வட்டத்தில் தாழக்குடி கிராமத்துக்கு தாழக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியிலும்,  கல்குளம் வட்டத்தில் செம்பொன்விளை  கிராமத்துக்கு, சேனம்விளை அரசு தொடக்கப் பள்ளியிலும்,  திருவட்டாறு வட்டத்தில் வியன்னூர்  கிராமத்துக்கு, பிலாங்காலவிளை, புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளிலும்,  விளவங்கோடு வட்டத்தில் களியக்காவிளை கிராமத்துக்கு, படந்தாலுமூடு  டி.சி.கே. மேல்நிலைப் பள்ளியிலும் , கிள்ளியூர் வட்டத்தில் பாலூர் கிராமத்துக்கு, மூசாரி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் காலை 10 மணிக்கு  நடைபெறவுள்ளது.
    இம்முகாமில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை  உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வருவாய் வட்டாட்சியர் அதிகாரத்துக்குள்பட்ட  நில பிரச்னைகள், குடிநீர் மற்றும் சாலை வசதி போன்ற பொதுவான மனுக்களை பொதுமக்கள் அளித்து தீர்வு காணலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai