Enable Javscript for better performance
பலாத்கார புகார்: இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    இரணியல் அருகே மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்றதாக இளைஞரை  போலீஸார் கைது செய்தனர்.
    குமரி மாவட்டம், பரசேரி மூலச்சல்விளையை சேர்ந்த ஐயப்பன் மனைவி புஷ்பம் (68).  இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் ஐயப்பன் வேலைக்கு சென்றாராம்.  
    வீட்டில் தனியாக இருந்த புஷ்பம், ஆட்டுக்கு உணவு கொடுக்க வெளியே வந்தாராம்.  அப்போது நிலை தடுமாறி, கீழே விழுந்த அவரை பக்கத்து வீட்டை சேர்ந்த சுரேஷ் (34),  தூக்கிச் சென்று வீட்டுக்குள் படுக்க வைத்துள்ளார்.  அப்போது மூதாட்டியை சுரேஷ் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
    அப்போது புஷ்பம் சப்தம் போடவும், அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை பார்த்த சுரேஷ், அவர்களை கத்தியை காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து புஷ்பம் அளித்த புகாரின்பேரில், இரணியல் போலீஸார் வழக்குப் பதிந்து, சுரேஷை கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai