Enable Javscript for better performance
மின்வாரிய ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மின்வாரிய ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 25th July 2019 06:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, நாகர்கோவிலில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  
    தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில், பார்வதிபுரம் மேற்பார்வை மின்பொறியாளர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திட்டத் தலைவர் பி. குணசேகரன் தலைமை வகித்தார்.
    மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலியை மின்வாரியமே நேரடியாக வழங்க வேண்டும், மின் விபத்துக்குள்ளாகும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கும் சலுகைகள் அனைத்தும் வழங்க வேண்டும், பகுதிநேர, ஒப்பந்தப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 
    கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டச் செயலாளர்கள் டி. செல்வதாஸ், டி. ராஜகோபால், மண்டலச் செயலாளர் பீர் முகமதுஷா, இணைச் செயலாளர் இர்வின்தாஸ் ஆகியோர் பேசினர். இதில், நிர்வாகிகள் கிறிஸ்துதாஸ், மோகன்தாஸ், ஏசுதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai