Enable Javscript for better performance
2 பெண் குழந்தைகள் திட்ட பயனாளிகளிடம் மறு மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    2 பெண் குழந்தைகள் திட்ட பயனாளிகளிடம் மறு மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு

    By DIN  |   Published on : 25th July 2019 06:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரண்டு பெண்குழந்தைகள் திட்ட பயனாளிகளிடம் தமிழக அரசின் மறுமதிப்பீட்டு குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியத்திலும் சிவகாமி அம்மையார் நினைவு பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயனாளிகளிடம் மறு மதிப்பீட்டு குழுவினர்கடந்த ஒருவாரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இத் திட்டத்தில்,  இரண்டு பெண்குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் காலவரை வைப்புதொகை குழந்தைகளின் பெயரில் வழங்கப்படும்.
    இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கிள்ளியூர் ஒன்றியத்துக்குள்பட்ட மத்திகோடு, முள்ளங்கனாவிளை, மிடாலம், கொல்லஞ்சி, நட்டாலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளிடம் தற்போது உள்ள விவரங்களை மறு மதிப்பீட்டு குழுவினர் சேகரித்தனர்.
    இதுகுறித்து ஒரு அதிகாரி கூறியதாவது: கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து இத் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த தகுதியுள்ள பயனாளிகள் தற்போது எந்த நிலையில் உள்ளனர். தற்போது எந்தப் பணியில் உள்ளனர் எனவும், பயனாளிகள் ஏழ்மை நிலையின்தான் உள்ளனரா என்பது குறித்தும் ஆய்வுசெய்வதாக தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai