முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
சுங்கான்கடையில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 30th July 2019 07:05 AM | Last Updated : 30th July 2019 07:05 AM | அ+அ அ- |

தோட்டியோடு- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் குளத்திலுள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் சுங்கான்கடையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்டியோடு-சுங்கான்கடை தேசிய நெடுஞ்சாலையொட்டியுள்ள அக்னிகுளம்- பிள்ளைகுளத்தில் ஒரு ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்து அங்கு கட்டடங்கள், கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகம் அகற்ற வேண்டும்.
சுங்கான்கடைப் பகுதியில் பொதுப்பணிதுறைக்கு சொந்தமான குளங்கள், புறம்போக்கு நிலங்கள் பெருமளவில் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்த நிலங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய மகா சபா மாவட்டச் செயலர் கணபதி தலைமை வகித்தார்.
கட்சியின் நிர்வாகிகள் அருள்டேவிட், செல்வராஜ், தேவஅருள் ரெவி, கார்மல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலர் அந்தோணிமுத்து, நிர்வாகிகள் அர்ஜூனன், சுசீலா, லீப்போண்ஸ், குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.