Enable Javscript for better performance
ஆரல்வாய்மொழியில் திமுக ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆரல்வாய்மொழியில் திமுக ஆலோசனைக் கூட்டம்

    By DIN  |   Published on : 04th June 2019 09:08 AM  |   அ+அ அ-   |    |  

    ஆரல்வாய்மொழியில் ஒன்றிய திமுக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    இக்கூட்டத்துக்கு ஒன்றியச் செயலர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். நகரச் செயலர்கள் சுப்பிரமணியன், சிவகுமார், ஜெயகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சிச் செயலர்கள் கல்யாணசுந்தரம், இம்மானுவேல், கோலப்பன், முருகேசன், தைநேசி, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் கோபி, நெசவாளர் அணி துணை அமைப்பாளர் கண்ணன், வழக்குரைஞர் பிரிவு நிர்வாகி பழனி, மாணவரணி அமைப்பாளர் நவின், தலைமை நிலையப் பேச்சாளர் செல்வகுமார், ஒன்றிய பிரதிநிதிகள் சின்னத்துரை, குமார் திரவியம், அகஸ்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
    தீர்மானங்கள்: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது; தோவாளை ஒன்றியத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்; இல்லையெனில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    மாவட்டப் பிரதிநிதி லாரன்ஸ் வரவேற்றார். இலக்கிய அணி அமைப்பாளர் சேதுவேல் நன்றி கூறினார்.

    kattana sevai