சொக்கம்பட்டி காசி விஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 14th June 2019 06:45 AM | Last Updated : 14th June 2019 06:45 AM | அ+அ அ- |

கடையநல்லூர் அருகேயுள்ள சொக்கம்பட்டி ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் உடனாகிய ஸ்ரீ காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ஜூன் 10ஆம் தேதி ஸ்ரீ சொக்கலிங்க விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, தினமும் பல்வேறு பூஜைகள், யாகசாலை வழிபாடுகள், ஆராதனைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜையும் , 8.31 மணிக்கு சுவாமி- ,அம்பாள் பரிவார மூர்த்திகள் மற்றும் ராஜகோபுரத்திற்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றன.
இதில், கோயில் செயல் அலுவலர் சதீஷ் , இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் கண்ணன், கோயில் எழுத்தர் குமார், விழா குழுவைச் சேர்ந்த வேலுச்சாமி பாண்டியன், முத்துப்பாண்டியன், செல்வம், சந்தன பாண்டியன், மகாலிங்கம், முத்துக்குமார் ,சடையப்பன் மற்றும் அனைத்துச் சமுதாயத் தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.