மார்த்தாண்டத்தில் திமுக ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 23rd June 2019 01:04 AM | Last Updated : 23rd June 2019 01:04 AM | அ+அ அ- |

குளங்கள், கால்வாய்கள், நீர் நிலைகளை முழுமையாக தூர் வார வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் மார்த்தாண்டத்தில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலர் த. மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். குழித்துறை நகரச் செயலர் பொன். ஆசைத்தம்பி, மாவட்ட அவைத் தலைவர் பப்புஷன், முன்னாள் அமைச்சர் கு. லாரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. புஸ்பலீலா ஆல்பன், மாவட்ட மகளிரணி நிர்வாகி கிளாடிஸ் லில்லி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ததேயு பிரேம்குமார், கிள்ளியூர் ஒன்றியச் செயலர் ராஜன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பீனா அமிர்தராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஜோஸ், குழித்துறை நகர இளைஞரணி அமைப்பாளர் ஆசாத் அலி, மேல்புறம் ஒன்றியச் செயலர் சிற்றாறு ரவிச்சந்திரன், அவைத் தலைவர் எஸ். மாஹின் அபூபக்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.