இரணியல் அரசு பள்ளிக்கு உபகரணங்கள் அளிப்பு
By DIN | Published On : 25th June 2019 05:50 AM | Last Updated : 25th June 2019 05:50 AM | அ+அ அ- |

இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் 200 பிளாஸ்டிக் சேர்கள், 2 கணினிகள் ஆகியன வழங்கப்பட்டன.
முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் இப்பள்ளிக்கு 200 பிளாஸ்டிக் சேர்கள், 2 கணினி ஆகியவை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் எஸ். ராஜகோபால் தலைமை வகித்தார். பள்ளியின் முன்னாள் மாணவரும் தலக்குளம் பி.எஸ். அறக்கட்டளை தலைவரும், நரம்பியல் நிபுணருமான மருத்துவர் ப. ஆறுமுகம், கடல் வாழ் உயிரியல்துறை விஞ்ஞானி ஏ.பி.லிப்டன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
கல்வி உபகரணங்களை பள்ளியின் தலைமையாசிரியை வி. ராஜேஸ்வரியிடம் வழங்கினர். நிகழ்ச்சியில், பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் எஸ். ரவிராஜ், முன்னாள் மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அமைப்பின் இணைச்செயலர் என்.கண்ணன் வரவேற்றார். தலைமையாசிரியை நன்றி கூறினார்.