ஞாலம் ஊராட்சியில் சாலை, பாலம் அமைக்கும் பணி தொடக்கம்
By DIN | Published On : 25th June 2019 05:52 AM | Last Updated : 25th June 2019 05:52 AM | அ+அ அ- |

தோவாளை ஒன்றியம், ஞாலம்பொற்றை புதுக்காலனியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் சாலை, பாலம் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
ஞாலம்பொற்றை புதுக்காலனியில் இப்பணியை தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். ஆஸ்டின், மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ. அசோகன், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் அ.ராஜன், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார், ஞாலம்பொற்றை புதுக்காலனி பொதுமக்கள் கலந்துகொண்டனர்.