தொலைபேசி மறு இணைப்பு முகாம்: பி.எஸ்.என்.எல். சார்பில் நாளை தொடக்கம்

கன்னியாகுமரி  மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். சார்பில்  தரைவழி தொலைபேசி மறுஇணைப்பு  பெறும் முகாம்

கன்னியாகுமரி  மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். சார்பில்  தரைவழி தொலைபேசி மறுஇணைப்பு  பெறும் முகாம் புதன்கிழமை (ஜூன் 26), வெள்ளிக்கிழமைகளில் (ஜூன் 28) நடைபெறுகிறது.
இதுதொடர்பாக, பி.எஸ்.என்.எல் நாகர்கோவில் பொதுமேலாளர் சஜூகுமார்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஏற்கெனவே தரைவழி தொலைபேசி இணைப்புகள் பெற்று தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ள வாடிக்கையாளர்கள் மீண்டும் பெறும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. தக்கலை, ஆளூர், காட்டாத்துறை, மணக்காவிளை, திருவிதாங்கோடு, வில்லுக்குறி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பயன் பெறும் வகையில் தக்கலை தொலைபேசி நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 26)  காலை 10. 30 முதல் மாலை 5  மணி வரை  முகாம் நடைபெறுகிறது.
மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் மார்த்தாண்டம் தொலைபேசி நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) காலை 10 முதல் மாலை 5  மணி வரை இந்த முகாம் நடைபெறும். ஆகவே, தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ துண்டிக்கப்பட்ட தொலைபேசி எண்களுக்கு பாக்கி தொகை இருப்பின், தள்ளுபடி பெற்று, மறு இணைப்பு பெறவும், பாக்கி தொகையைச் செலுத்தி கணக்கை நேர் செய்யவும், இம்முகாம்களில் பங்கேற்று பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com