சுடச்சுட

  

  ஊதிய உயர்வு கோரி 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 26th June 2019 06:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நூறு நாள் வேலைத்திட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 500ஆக ஊதியத்தை உயர்த்தக் கோரி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர், ராஜாக்கமங்கலம் ஒன்றிய அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  ஆர்ப்பாட்டத்தில், ஊரக வேலைத்திட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் தொடர்ந்து 100 நாள்கள் வேலை அளித்து, தற்போதைய ஊதியம் ரூ. 220 ஐ குறைக்காமல் வழங்க வேண்டும்; தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 200 நாள்கள் வேலை, ரூ. 500 ஊதியம் என உயர்த்தி வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள 2 மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்; தூய்மை காவலர்களின் தின ஊதியத்தை ரூ.300 ஆக உயர்த்தி வழங்குவதுடன் மாதந்தோறும் முதல் வாரத்தில் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
  இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் ஒன்றியச் செயலர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் என்.எஸ்.கண்ணன், தாமோதரன், குமரேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலர் எஸ்.டி.ராஜகுமார், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் மலைவிளை பாசி ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் மிக்கேல் நாயகி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai