சுடச்சுட

    

    ஆட்டோ ஓட்டுநர்களை நல வாரிய உறுப்பினர்களாக பதிவு செய்யக்கோரி,   தொழிலாளர் நலவாரிய அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
    கன்னியாகுமரி மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் சார்பில், மாவட்டத் தலைவர் மரிய ஸ்டீபன், நாகர்கோவில் தொழிலாளர் நலவாரிய அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: 
    ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு பேட்ஜ் இருந்தால் மட்டுமே நலவாரியத்தில் பதிவு செய்ய முடியும் என்று அரசு கூறிவருகிறது. ஆனால், 7,500 கிலோ எடை கொண்ட வாகனத்திற்கு பேட்ஜ் கட்டாயம் இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. அதன்படி, ஓட்டுநர் உரிமம் மட்டும் உள்ள தொழிலாளியை நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், பொதுச்செயலர் பொன்.சோபனராஜ், துணைத் தலைவர் அந்தோணி, நிர்வாகிகள் வில்சன்,கிறிஸ்டோபர், மோட்டார் சங்க மாவட்டச் செயலர் பிரேம் ஆனந்த்,  வின்சென்ட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai