சுடச்சுட

  

  நீட் தேர்வில், நாகர்கோவில் அல்போன்சா அகாதெமி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தொடர்ந்து 3 ஆவது ஆண்டாக  சாதனை படைத்துள்ளனர். 
  நாகர்கோவில் அல்போன்சா பள்ளியில், செயின்ட் அல்போன்சா அகாதெமி பார் எக்ஸ்லென்ஸ் அமைப்பும், ஆந்திர மாநிலத்தின் மாஸ்டர்ஜி அமைப்பும் இணைந்து நீர் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகின்றன. 
  நிகழாண்டுக்கான நீட் தேர்வில் அல்போன்சா அகாதெமியில் பயின்ற 174 மாணவ- மாணவிகள் வெற்றிபெற்று மருத்துவப் படிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில், ராகவி 720-க்கு 594 மதிப்பெண்களும்,  பிரியதர்ஷ்னி 560 மதிப்பெண்களும், ஜெரிஷ்மா டிட்டு 521 மதிப்பெண்களும், பூமிகா 507 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மேலும்,  500 மதிப்பெண்களுக்கு மேல் 4 பேர், 400 மதிப்பெண்களுக்குமேல் 18 பேர்,   350 மதிப்பெண்களுக்கு மேல் 34 பேர்,  300 மதிப்பெண்களுக்கு மேல் 49 பேர் பெற்றுள்ளனர்.
  நீட் மற்றும் என்டிஎஸ்இ தேர்வுகளில் வெற்றிபெற்றவர்களை செயின்ட் அல்போன்சா அகாதெமியின் இயக்குநரும், தக்கலை மறைமாவட்ட முதன்மைப் பணியாளருமான தாமஸ் பெளவத்துப்பறம்பில், அல்போன்சா பள்ளித் தாளாளர் சனில் ஜான், பள்ளி முதல்வர் லிசபெத்,  துணை முதல்வர் அஜின்ஜோஸ், கல்வி ஒருங்கிணைப்பாளர் ராஜையன், உயர்நிலைப் பிரிவு துணை முதல்வர் பிரேம் கலா, தலைமை ஆசிரியர் மோனிக்கா ஸ்பினோலா, கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் ஜீனா, முனைவர் ஜெமுனா பென்னட்  உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai