சுடச்சுட

  

  "வேளாண் தொழில்நுட்பப் பயிற்சி: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்'

  By DIN  |   Published on : 26th June 2019 06:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவட்டாறு, மேல்புற வட்டார விவசாயிகள் இலவசமாக வேளாண் தொழில்நுட்பப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  இது குறித்து வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுந்தர் டானியல் பாலஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
  திருவட்டாறு மற்றும் மேல்புறம்  வட்டார வேளாண் துறையில் செயல்படும் அட்மா திட்டத்தின் கீழ்  நிகழ் நிதியாண்டு  விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்களான கூட்டுப்பண்ணையம், தேனீ வளர்ப்பு, சூரிய ஒளியில் இயங்கும் விளக்குப்பொறி,  தென்னை மற்றும் வாழை சாகுபடி,  இயற்கை பண்ணையப்  பயிற்சி (1, 3, 5 நாள்கள்)  செயல்விளக்கம் மற்றும் களச் சுற்றுலா (2, 3,  5,   7 நாள்கள்) வழியாக இலவசமாகவே  தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்படுகிறது. 
  இத்திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற தங்களது முகவரி மற்றும் ஆதார் எண்  ஆகியவற்றை திருவட்டாறு  மற்றும் மேல்புறம் வேளாண்மை விரிவாக்க மையத்தில்  முன்னுரிமை பதிவேட்டில் பதிவுசெய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai