குமரியில் இன்று அணைகள் திறப்பு இல்லை

குமரி மாவட்டத்தில் புதன்கிழமை அணைகள் திறக்கப்படும்  என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக அரசின் உத்தரவு

குமரி மாவட்டத்தில் புதன்கிழமை அணைகள் திறக்கப்படும்  என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக அரசின் உத்தரவு கிடைக்காததால் அணைகள் திறப்பு மேலும் ஓரிரு நாள்கள் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ பருவ சாகுபடிக்காக ஜூன் முதல் வாரத்தில் அணைகள் திறக்கப்படுவது வழக்கம். நிகழாண்டு அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் ஜூன் முதல் வாரத்தில் அணைகள் திறக்கப்படவில்லை.  அணைகள் திறக்கப்படாதால் விவசாயிகள் நடவு செய்துள்ள நெற்பயிர்கள் கருகி வருகின்றன. 
இந்நிலையில், பாசனத்துக்கு அணைகளை உடனே திறக்க வேண்டுமென்று விவசாயிகள் வலியுறுத்தியதால், ஜூன் 26 ஆம் தேதி அணைகளைத் திறக்கும் வகையிலான பரிந்துரைகளை பொதுப்பணித்துறையினர் அரசுக்கு அனுப்பினர். எனவே, புதன்கிழமை அணைகள் திறக்கப்பட்டு விடும் என்ற பரவலான  எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் நிலவியது.
ஆனால், செவ்வாய்க்கிழமை இரவு வரை அணைகளை திறப்பது தொடர்பான ஆணை தமிழக அரசிடமிருந்து பொதுப்பணித்துறையினருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில்  அணைகள் திறப்பு மேலும் ஓரிரு நாள்கள் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. 
இதுகுறித்து, பொதுப்பணித்துறை வட்டாரங்களில் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர் இருப்பு தற்போது  1500 மில்லியன் கன அடியை எட்டியுள்ளது. புதன்கிழமை (ஜூன் 26) அணைகளைத் திறக்கும் வகையிலான பரிந்துரைகளை அரசுக்கு கொடுத்திருந்தோம். அணைகளைத் திறப்பது குறித்து பல்வேறு சூழல்களை கருத்தில் எடுத்துக் கொண்டு தான் அரசு ஆணை பிறப்பிக்கும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com