தக்கலை அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் திருட்டு
By DIN | Published On : 04th March 2019 06:14 AM | Last Updated : 04th March 2019 06:14 AM | அ+அ அ- |

தக்கலை அருகே சூசையப்பர் ஆலய குருசடியின் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கல்குறிச்சி அருகே புனித சூசையப்பர் ஆலய குருசடி உள்ளது. இந்த ஆலயத்தின் கதவுகள் ஞாயிற்றுக்கிழமை காலை திறந்து கிடந்ததாம். தகவலறிந்து வந்த போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது ஆலய முன்பக்கம் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தக்கலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.