மண்டைக்காடு மாசிக்கொடை விழா: மார்ச் 12இல் உள்ளூர் விடுமுறை
By DIN | Published On : 08th March 2019 12:56 AM | Last Updated : 08th March 2019 12:56 AM | அ+அ அ- |

மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழாவையொட்டி, மார்ச் 12 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புகழ்பெற்ற மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழாவையொட்டி, மார்ச் 12 ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கு ஈடாக ஏப்ரல் மாதம் 2 ஆவது சனிக்கிழமை (ஏப்ரல் 13) குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.
மார்ச் 12 ஆம் தேதி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.