சுடச்சுட

  

  ஆற்றூர்  ஒயிட் நினைவு கல்வி குழுமம் சார்பில் உலக காசநோய் தினத்தையொட்டி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு  பேரணி வெள்ளிக்கிழமை  நடைபெற்றது
  ஒயிட் நினைவு கல்லூரிகள், கன்னியாகுமரி மாவட்ட  காசநோய் தடுப்பு மையம் சார்பில் விழிப்புணர்வு  பேரணி, கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இப்பேரணியை கல்லூரியின் தலைவர் டாக்டர் லீலாபாய் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக ஆற்றூர் சந்திப்பில் நிறைவடைந்தது.
  பேரணியில், மாணவர்கள் காச நோய் குறித்து விழிப்புணர்வு  பதாகைகள் ஏந்திச் சென்றனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
  முடிவில், டாக்டர் அகமது கபீர், காசநோய்  குறித்துப் பேசினார்.  ஒயிட் நினைவு கல்விச் சங்கத் தலைவர் டாக்டர் ஜூடித், செயலர்  டாக்டர் நேஷ், கல்வியியல் கல்லூரி முதல்வர்  விக்டர்ராஜ்,  ஹோமியோபதி  மருத்துவக்கல்லூரி  முதல்வர்  ரூபஸ் நதானியேல், செவிலியர்  கல்லூரி முதல்வர் ஷோயி  சோபனா அலெக்சாண்டர், பிசியோதெரபி கல்லூரி  முதல்வர் சதீஷ் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai