சுடச்சுட

  

  களியக்காவிளையில் கழிவுநீர் ஓடை அமைக்கும் பணி தீவிரம்

  By DIN  |   Published on : 16th March 2019 10:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  களியக்காவிளையில் தேசிய நெடுஞ்சாலையில் கழிவுநீர் ஓடை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை  மேற்கொள்ளப்பட்டது .
  களியக்காவிளை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கழிவுநீர் ஓடை அமைத்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. 
  போதிய பராமரிப்பில்லாததால் இந்த கழிவுநீரோடை சிதிலமடைந்து காணப்படுவதால்,  மழைக்காலங்களில் பெருமளவில் தண்ணீர் தேங்குவதால் சாலைகள் எளிதில் சேதமடைந்து வருகிறது. சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடுகளும் அதிகரித்துள்ளன.
  இதனிடையே, களியக்காவிளை சந்திப்பில் இருந்து பி.பி.எம். சந்திப்பு வரை சாலை ஓரமாக கழிவுநீர் ஓடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. 
  இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தாவது: படந்தாலுமூடு பகுதியில் நடைபெற்று வரும் சாலையோரக் கழிவு நீர் ஓடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறு. 
  இதன் தொடர்ச்சியாக இப்பகுதியிலும் கழிவுநீர் ஓடை அமைக்கப் படுகிறது. களியக்காவிளை-பி.பி.எம். சந்திப்பு வரை அமைக்கப்படவுள்ள இந்த ஓடை பி.பி.எம். சந்திப்பு - ஒற்றாமரம் வரை யுள்ள கழிவுநீரோடையில் இணைக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai