சுடச்சுட

    

    களியக்காவிளை அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த கார்: போலீஸார் விசாரணை

    By DIN  |   Published on : 16th March 2019 09:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    களியக்காவிளை அருகே வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    களியக்காவிளை அருகேயுள்ள செம்மான்விளை பகுதியைச் சேர்ந்தவர் அலோசியஸ். இவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். இவருடைய காரை பக்கத்தில் உள்ள பிரதீப்குமார் வீட்டின் முன் நிறுத்தியிருந்தாராம். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சப்தம் கேட்டு எழுந்த பிரதீப்குமார் வீட்டினர், உடடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். எனினும், கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
    இதுகுறித்து அலோசியஸின் மனைவி அஜி அளித்த புகாரின் பேரில், களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்து, காருக்கு யாரேனும் மர்ம நபர்கள் தீ வைத்தனரா என விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai