சுடச்சுட

  

  பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மார்த்தாண்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  மாநில துணைப் பொதுச் செயலர் இரா. ஹரி தலைமை வகித்தார்.  கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலர்   கே. ஜாண் ராபர்ட் முன்னிலை வகித்தார். மாநில கொள்கை விளக்க அணிச்  செயலர் கே. நந்தகோபால், குமரி மாவட்ட முன்னாள் செயலர்கள் எம்.பி. ரவி,  ஆரோக்கியபுரம் அலெக்சாண்டர்,  மாநில பொதுக்குழு உறுப்பினர் ப. ரமேஷ் உள்ளிட்டோர் பேசினர்.
     கூட்டத்தில்,  புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்காக பாடுபடுவது,  காங்கிரஸ் கட்சியுடன் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்த மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை  கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  இதில், மேல்புறம் ஒன்றியச் செயலர் பத்மராஜன், மாநில துணை அமைப்புச் செயலர் அலெக்ஸாண்டர் ராஜகுமார், மாவட்ட இளைஞரணித்  தலைவர் ஸ்ரீஜி,  செயலர் அனீஸ்,  மாவட்ட மாணவரணிச்  செயலர் கே. சதீஷ், கிள்ளியூர் ஒன்றியச் செயலர் கவிகுமார், மாவட்ட தொழிற்சங்கச் செயலர் எபின்பால், மாவட்ட துணைச் செயலர் இ. அஜிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   மாவட்ட அமைப்புச் செயலர் எஸ். ஷாஜி குமார் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் டி. உதயகுமார் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai