அதிமுக பிரமுகர் மகன் கொலை வழக்கில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் 3 பேர் சரண்

கன்னியாகுமரி மாவட்டம், இரணியலில் கொலை செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் மகன் கொலை வழக்கில்

கன்னியாகுமரி மாவட்டம், இரணியலில் கொலை செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் மகன் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் வெள்ளிக்கிழமை நாகர்கோவில் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
 இரணியல் அருகேயுள்ள தோப்புவிளையைச் சேர்ந்தவர் சுரேந்திரன். இவர், ஆளூர் பேரூராட்சி முன்னாள் அதிமுக செயலர். இவரது மகன் நவீன் (22), அவரது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை காலை ஆளூர் வீராணி குளத்தின் கரையில் ரத்த காயத்துடன் நவீன் இறந்து கிடந்தார். இரணியல் போலீஸார் சடலத்தை மீட்டு மேற்கொண்ட விசாரணையில், நவீன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது சடலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொலையாளிகளை கைது செய்யும்வரை உடலை வாங்க மாட்டோம் என சடலத்தை வாங்க அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். இதனால், சடலம் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீஸாரின் தொடர் விசாரணையில், நவீனை மதுபோதையில் அவரது நண்பர்களே கொலை செய்திருப்பது தெரியவந்ததாம். 
இதற்கிடையே, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய தோப்புவிளை பகுதியைச் சேர்ந்த சதீஷ், பதீஷ், வினோத்  ஆகிய 3 பேர் நாகர்கோவில் 3  ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரண் அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com