தேர்தல் பணி ஒரே மாதிரி ஊதியம், படிகள் வழங்க வலியுறுத்தல்

தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஓய்வு பெற்ற போலீஸாருக்கு ஒரே மாதிரியான ஊதியம்,  படிகள் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஓய்வு பெற்ற போலீஸாருக்கு ஒரே மாதிரியான ஊதியம்,  படிகள் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து குமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவல் ஆளினர்கள் நலச்சங்கத்தின் சட்ட ஆலோசகர் மரிய ஸ்டீபன் கூறியது: குமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற போலீஸார் உள்ளனர். சட்டப்பேரவை, மக்களவை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில், ஓய்வு பெற்ற போலீஸாரும், ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களும் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இதில், ஓய்வு பெற்ற போலீஸாருக்கு வழங்கப்படும் தேர்தல் பணி படி மற்றும் ஊதியம், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு வழங்கும் ஊதியம், படிகளை விட மிக, மிக குறைவாக வழங்கப்படுகிறது.
தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஓய்வு பெற்ற ராணுவ பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், படிகள் போன்று, ஓய்வு பெற்ற போலீஸாருக்கும் வழங்க வேண்டும். 
 இது குறித்து சட்டத்துக்கு உள்பட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனில், வரும் மக்களவைத் தேர்தல் பணிகளை புறிக்கணிப்போம். இது தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையர், தலைமை செயலாளர், டி.ஜி.பி., குமரி மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com