Enable Javscript for better performance
சேர்ந்தமரம் அருகே அனுமதியின்றி கலைநிகழ்ச்சி: 23 பேர் மீது வழக்குப் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    சேர்ந்தமரம் அருகே அனுமதியின்றி கலைநிகழ்ச்சி: 23 பேர் மீது வழக்குப் பதிவு

    By DIN  |   Published on : 17th March 2019 03:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேர்ந்தமரம் அருகேயுள்ள வீரசிகாமணியில் அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் கலைநிகழ்ச்சி நடத்திய பிரச்னையில் 23 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
    வீரசிகாமணியில் உள்ள ஸ்ரீராஜகோபாலமன்னார் சுவாமி கோயிலில் தற்போது பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் போது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை, அந்தந்த சமுதாயத்தினர் வசிக்கும் பகுதியில் நடத்திக்கொள்ள வேண்டும் என காவல் துறையால் அறிவுறுத்தப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
    இந்நிலையில், போலீஸாரிடம் தெரிவித்ததற்கு மாறாக, கோயிலில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாம். இதையடுத்து, அங்கு சென்ற காவல் நிலைய ஆய்வாளர் கோவிந்தன், உதவி ஆய்வாளர் உத்திரகுமார் ஆகியோர் காவல் துறை அனுமதி பெறாமல் கோயிலில் கலைநிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என கூறினர். எனினும் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து, கலைநிகழ்ச்சியை நடத்திய சமுதாய பிரமுகர்கள் 23 பேர் மீது சேர்ந்தமரம் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai