சுடச்சுட

  


  பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 
  பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற மேற்பார்வையில் முழு விசாரணை நடத்தி கடும் தண்டனை வழங்க  வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி சிஐடியூ சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட அமைப்பாளர் பி.இந்திரா தலைமை வகித்தார். 
  உழைக்கும் பெண்கள் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம். மகாலட்சுமி, மாவட்ட சிஐடியூ செயலர் கே. தங்கமோகன், மாவட்டத் தலைவர் பி.சிங்காரன், மாநிலச் செயலர் ஐடா ஹெலன், மாவட்டப் பொருளாளர் எம்.சித்ரா, தையல் கலைஞர் சங்க மாவட்டச் செயலர் வி.சந்திரகலா, மீன் தொழிலாளர் சங்க பொதுச்செயலர் எஸ்.அந்தோணி, சிஐடியூ மாவட்டத் துணைத்தலைவர் ஜி.சந்திரபோஸ், மாவட்ட நிர்வாகிகள் பொன்.சோபனராஜ், ஜான்செüந்தர்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai