மாணவிகளுக்கு பள்ளிப் பருவத்தில் விழிப்புணர்வு பயிற்சி: மகளிர் மாநாட்டில் வலியுறுத்தல்

பாலியல் தொல்லையில் இருந்து தங்களை பாதுகாப்பது குறித்து மாணவிகளுக்கு பள்ளி பருவத்திலேயே விழிப்புணர்வு பயிற்சி


பாலியல் தொல்லையில் இருந்து தங்களை பாதுகாப்பது குறித்து மாணவிகளுக்கு பள்ளி பருவத்திலேயே விழிப்புணர்வு பயிற்சி அளிக்க வேண்டும் என உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
நாகர்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் கன்னியாகுமரி மாவட்ட மாநாடு, சர்வதேச பெண்கள் தின கருத்தரங்கிற்கு ஆர்.ராதா தலைமை வகித்தார். உ. சுமதி, டி.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாநாட்டுக் கொடியினை கே.காளி பிரசாத் ஏற்றினார்.
தீர்மானங்கள்: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்; இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் பாரபட்சமின்றி கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; பாலியல் தொல்லையில் இருந்து தங்களை பாதுகாப்பது குறித்து பள்ளிப் பருவத்திலேயே மாணவிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்க வேண்டும். 
நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; ஜவுளிக்கடை உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் பணிசெய்யும் பெண்களுக்கு குறைந்த பட்ச மாத ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட இணை அமைப்பாளர் எம்.சித்ரா அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.இந்திரா அறிக்கை வாசித்தார். மாநாட்டில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். லீமாரோஸ், அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.மகாலட்சுமி, சிஐடியூ மாவட்டத் தலைவர் பி.சிங்காரன், மாவட்டச் செயலர் கே.தங்கமோகன், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ஐடா ஹெலன், மாதர் சங்க மாவட்டச் செயலர் ரகுபதி, மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.எஸ்.செண்பகம் உள்ளிட்டோர் பேசினர். 
இணை அமைப்பாளர் பி.பரிமளா பாய் வரவேற்றார். ஜி.களஞ்சியம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com