சுடச்சுட

  

  பொற்றையடி ஸ்ரீஷீரடி சாய்பாபா ஆனந்த ஆலயத்தில் வருஷாபிஷக விழா புதன்கிழமை (மார்ச் 20) நடைபெறுகிறது. 
  இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு சங்கல்ப யாகமும்,  8.30 மணிக்கு பாபாவின் மூல மந்திர நாம சங்கீர்த்தனமும்,  9 மணி முதல் 9 விதமான அபிஷேகமும்,  இதில் சிறப்பு அம்சமாக 3,006 லிட்டர் பாலாபிஷேகமும் நடைபெறுகிறது. பின்னர் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது.
  மாலையில் மலர் அலங்கார பல்லக்கு ஊர்வலத்தைத் தொடர்ந்து அபிஷேக்ராஜ், சௌம்யா அபிஷேக்ராஜ்,  மணிகண்டன் ஆகியோரின் ஆன்மிக உரை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஷீரடி சாயி சேவா சங்கத்தினர் செய்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai