பள்ளியாடி அப்பா திருத்தலத்தில் சமபந்தி விருந்து

குமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள பள்ளியாடி அப்பா திருத்தலத்தில் சமபந்தி விருந்து திங்கள்கிழமை நடைபெற்றது.

குமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள பள்ளியாடி அப்பா திருத்தலத்தில் சமபந்தி விருந்து திங்கள்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில்  பள்ளியாடியில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த புளிய மரத்தடியில் தீப ஒளி அமைந்துள்ளது. இந்த தீப ஒளியை ஜாதி, மத வேறுபாடின்றி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். 
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் பஞ்சம் ஏற்பட்டபோது அப்பகுதியில் வசித்த மக்கள் இணைந்து அங்கு தீப ஒளி ஏற்றி கஞ்சி காய்ச்சி குடித்ததாக கூறப்படுகிறது. இத்திருத்தலத்திற்கு பக்தர்கள் அளிக்கும் காணிக்கை பொருள்களை சமையல் செய்து சர்வ மத பிரார்த்தனைக்கு பின்னர், மக்களுக்கு சமபந்தி விருந்து வழங்குகின்றனர். இந்த விருந்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.
நிகழாண்டு திங்கள்கிழமை காலை தொடங்கிய சமபந்தி விருந்து மாலையில் நிறைவடைந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்ற மத நல்லிணக்கப் பிரார்த்தனையில் மும்மதத் தலைவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். ஏற்பாடுகளை அப்பா அறக்கட்டளைத் தலைவர் பால்ராஜ், செயலர் எம்.எஸ் குமார், பொருளாளர் சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com