வேளிமலையில் காசநோய் விழிப்புணர்வு முகாம்

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, குமரி மாவட்ட காசநோய் மையம், ஆசாரிப்பள்ளம் கோதநல்லூர் காசநோய் அலகு

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, குமரி மாவட்ட காசநோய் மையம், ஆசாரிப்பள்ளம் கோதநல்லூர் காசநோய் அலகு மற்றும் வேளிமலை எஸ்டேட்  நிர்வாகம் சார்பில் காசநோய் விழிப்புணர்வு மற்றும்  சிறப்பு மருத்துவ முகாம் வேளிமலையில் நடைபெற்றது. 
முகாமை மாவட்ட காசநோய் துறை துணை இயக்குநர் வி.பி. துரை தொடங்கிவைத்து, ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு   காசநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சிறப்புரையாற்றினார்.
பின்னர் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில், காசநோய் கட்டுப்பாட்டு மருத்துவர்  ஏ.அஹ்மது கபீர், துணை இயக்குநர்  ஆகியோர் தொழிலாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து, மருந்துகளை வழங்கினர்.   நிகழ்ச்சியில், காசநோய் களப் பணியாளர்கள் சோபி, சிவநேசன், பியூலா ஷெரின், லிங்க ஷோபா ஆகியோர் பங்கேற்றனர்.வேளிமலை எஸ்டேட்  முதுநிலை மேலாளர் அருண் மேத்யூ,  எஸ்டேட்  மருத்துவர்  ஜானகிகிராமன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com