ரோஜாவனம் கல்லூரி மாணவர்களுக்கு காசநோய் விழிப்புணர்வுப் பயிற்சி

நாகர்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதாரஆய்வாளர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கு காசநோய் பற்றிய

நாகர்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதாரஆய்வாளர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கு காசநோய் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி நெஞ்சகநோய் மருத்துவ மையத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சிக்கு மாவட்ட மருத்துவப் பணிகள் காசநோய் பிரிவு துணை இயக்குநர் டாக்டர் வி.பி. துரை தலைமை வகித்தார்.  காசநோயின்தாக்கம், காசநோய்க் கிருமிகள், காசநோயின் அறிகுறிகள்,சளி பரிசோதனை, காசநோயாளிசிகிச்சைமுறைகள் ஆகியன குறித்து டாக்டர் முத்துகுமார், அமைப்பாளர் பிரேமலதா,  ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஸ்வரன், ஆய்வகதொழில்நுட்பனர் புஷ்பலீலா ஆகியோர் மாணவர்களுக்குப் பயிற்சியளித்தனர். சிபிஎன்ஏடிஎனும் கணினிவழிஇயங்கும் கருவி மூலம் காசநோயைமிகத் துல்லியமாக எவ்வாறு கண்டுபிடிப்பது   என்பது குறித்து மாவட்டத் துணை இயக்குநர் டாக்டர் வி.பி.துரை மற்றும் ஆலிஸ்ராணிஆகியோர் மாணவர்களுக்கு விளக்கிக்  கூறினர்.  மாணவர்களின் சந்தேகங்கள் கேள்விபதில் நிகழ்வு மூலம் தெளிவுபடுத்தப்பட்டன.
நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் அய்யப்பன்,துரைராஜ்,சிவதாணுபிள்ளை, மரியஜான்,கார்த்திக், சாம் ஜெபா,லிட்வின் லூசியா,பகவதிபெருமாள்,நன்னடத்தைஅலுவலர் டாக்டர் டால்பின் ராஜா,அலுவலகச் செயலர் சுஜின்,அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com