Enable Javscript for better performance
குமரி தொகுதிக்கு பொதுப் பார்வையாளர் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு பொதுப்பார்வையாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    இதுகுறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக் குறிப்பு:  மக்களவைத் தேர்தலை முன்னிட்டு  இந்திய தேர்தல் ஆணையம்,  கன்னியாகுமரி மாவட்டத்துக்கு தேர்தல் பணிகளை கண்காணிக்க தேர்தல் பொதுப் பார்வையாளராக (G‌e‌n‌e‌r​a‌l Ob‌s‌e‌r‌v‌e‌r) காஜலை நியமனம் செய்துள்ளது.  இவர் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். 
    தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதும் பொதுமக்கள் தெரிவிக்க விரும்பினால் தேர்தல் பொதுப் பார்வையாளரை 9442041106 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.   நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் தேர்தல் பொதுப் பார்வையாளரை மாலை 4 மணி முதல் 5 மணிக்குள் நேரில் சந்தித்து புகார் மனுக்கள் அளிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai