Enable Javscript for better performance
குமரி மாவட்ட மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்துவேன்: வசந்தகுமார் எம்எல்ஏ பேச்சு- Dinamani

சுடச்சுட

    

    குமரி மாவட்ட மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்துவேன்: வசந்தகுமார் எம்எல்ஏ பேச்சு

    By DIN  |   Published on : 28th March 2019 06:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நான் வெற்றி பெற்றால் குமரி மாவட்ட மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை கொண்டு வருவேன் என்றார் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார் எம்எல்ஏ.
    மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி  செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுகக்கூட்டம் நாகர்கோவிலில்  நடைபெற்றது. 
    குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலர் என்.சுரேஷ்ராஜன் எம்எல்ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில் வசந்தகுமார் பேசியது;  எனது சொந்த ஊர் அகஸ்தீசுவரம். இது தெரியாமல் பொன்.ராதாகிருஷ்ணன் என்னை வெளியூர்காரர் என கூறி வருகிறார். ரூ. 40 ஆயிரம் கோடிக்கு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்ததாக கூறும் பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன், அந்த திட்டங்களை முறையாக பட்டியலிட்டு கூற முடியுமா?.  கடந்த தேர்தலின் போது ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுப்பேன் என பொய்யான வாக்குறுதிகளை கூறி வெற்றி பெற்றவர் பொன்.ராதாகிருஷ்ணன். மோடியும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என கூறினார். ஆனால் வேலைவாய்ப்புக்கான எந்த திட்டத்தையும் செய்யவில்லை. 
     ராகுல் காந்தி அறிவித்திருக்கும் ரூ. 72 ஆயிரம் நிதி திட்டம் ஏழைகளுக்கு பயன் தரும் திட்டம். காமராஜர் வழி வந்த  என்னைப்பற்றி பேச பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தகுதி கிடையாது. நான் குமரி மாவட்ட மக்களுக்கும், மாணவர்களுக்கும் பயனுள்ள திட்டங்களை கொண்டு வருவதுடன், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்குரிய சூழலை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார் அவர்.  
     இதில், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலர் ஆர்.செல்லசுவாமி, முன்னாள் எம்பிக்கள் எ.வி.பெல்லார்மின், ஹெலன் டேவிட்சன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிரின்ஸ், ஆஸ்டின், காங்கிரஸ்  மாநிலச் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், குமரி கிழக்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், மதிமுக மாவட்டச் செயலர் வெற்றிவேல், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலர் திருமாவேந்தன் மற்றும்  கூட்டணி கட்சியினர் பலர்  கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai