Enable Javscript for better performance
தக்கலையில் தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர்கள் தர்னா- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு தொலைத்தொடர்பு  ஒப்பந்த தொழிலாளர் சங்கமும்,  ஊழியர் சங்கமும் இணைந்து  மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தக்கலையில்  புதன்கிழமை மாலை நேர தர்னாவில் ஈடுபட்டனர்.
     தக்கலை  தொலைத் தொடர்பு அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்னாவுக்கு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.சுயம்புலிங்கம் தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலர் செல்வம் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.  ஊழியர் சங்க மாவட்டச் செயலர்  பி.ராஜூ போராட்டம் குறித்துப் பேசினார்.   ஒப்பந்த தொழிலாளர் சங்க அமைப்புச் செயலர்  சுனில்குமார் வாழ்த்துரை வழங்கினார்.  ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் சி.ஆறுமுகம் நிறைவுரையாற்றினார். 
      ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த ஈபிஎப் பணத்தை ஒப்பந்தகாரர்  உடனடியாக ஊழியர்கணக்கில் செலுத்தவேண்டும்.  டிசம்பர், ஜனவரி, மற்றும் பிப்ரவரி ஆகிய மூன்று மாதத்திற்கான ஒப்பந்தகாரர் பில்லை மாநில அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.  நிலுவையிலுள்ள மூன்று மாத  ஊதியத்தை உடனடியாக வழங்க கேட்டு  தர்னா போராட்டம் நடைபெற்றது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai