Enable Javscript for better performance
பத்மநாபபுரத்தில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட  ரூ. 1 லட்சம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    பத்மநாபபுரத்தில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட  ரூ. 1 லட்சம் பறிமுதல்

    By DIN  |   Published on : 28th March 2019 06:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டு ரூ.   1 லட்சத்து  ஆயிரத்து 230 ஐ பறக்கும்படை அதிகாரிகள் புதன்கிழமை  பறிமுதல் செய்தனர்.
    மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் ரோந்து பணிக்காக  வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களை கொண்டு பறக்கும் படை,  நிலையான கண்காணிப்பு, வீடியோ கண்காணிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ள தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 37 குழுக்களாக பிரிந்து சுழற்சி முறையில் 24  மணி நேரமும் ரோந்து பணியில்  ஈடுபட்டு வருகின்றனர். 
    இந்நிலையில், பத்மநாபபுரம் பகுதியில் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 1 லட்சத்து,  ஆயிரத்து 230 ஐ பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
    குமரி மாவட்டத்தில் கடந்த 14  ஆம் தேதி முதல் 27 ஆம் தேதிவரை,  உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக ரூ. 94 லட்சத்து 80 ஆயிரத்து 846  ரொக்கம், 327  கிராம் தங்கம், 1 கிலோ 300  கிராம் வெள்ளி, 11 மிக்சிகள் மற்றும் 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai