Enable Javscript for better performance
மக்களவையில் மீனவர்களின் குரலாக ஒலிப்பேன்: சுயேச்சை வேட்பாளர் உறுதி- Dinamani

சுடச்சுட

    

    மக்களவையில் மீனவர்களின் குரலாக ஒலிப்பேன்: சுயேச்சை வேட்பாளர் உறுதி

    By DIN  |   Published on : 28th March 2019 06:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தலில் வெற்றிபெற்றால் மக்களவையில் மீனவர்களின் குரலாக ஒலிப்பேன் என கன்னியாகுமரி தொகுதியில் மீனவ கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் கே. ஜூலியஸ் தெரிவித்தார்.
    குமரி மாவட்டம், இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த இவர், குழித்துறையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    மத்திய, மாநில அரசுகளில் கடந்த 1957 ஆம் ஆண்டுகளில் மீன்வளத் துறை அமைச்சராக இருந்த லூர்தம்மாள் சைமன் பதவிக் காலத்துக்குப் பின் குமரி மாவட்ட மீனவர்களுக்கு அரசில் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. ஆகவே இத் தேர்தலில் மீனவர் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுகிறேன். எனக்கு குமரி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான மீனவர்கள் மற்றும் மீனவ அமைப்புகள் ஆதரவு உள்ளது. நான் வெற்றி பெற்றால் மக்களவையில்  மீனவர்களின் குரலாக ஒலிப்பேன். மீனவளத் துறை அலுவலகங்களில் மீனவர்கள் நூறு சதம் பணியமர்த்தப்படுவர்.  58 வயதான மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். நாட்டுப்படகு, விசைப்படகுகளுக்கு மானியத்துடன் வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  ஆதிதிராவிடர், மலைவாழ் மக்கள் போன்று  மீனவர்கள் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்படுவர். மீனவர் பாதுகாப்பு கருதி குமரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும். இம் மாவட்டத்தில் மீன்வளக் கல்லூரி கொண்டு வரப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai