முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 15th May 2019 06:45 AM | Last Updated : 15th May 2019 06:45 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வட்டார நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிழக்கு மாவட்டத் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளான மே 21ஆம் தேதி காலை 9 மணிக்கு நாகர்கோவில் டதி பள்ளி சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது, கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் தேச ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை குறிக்கோளாக கொண்டு வருகை தரும் ராஜீவ் ஜோதி சத்பாவன யாத்ரா ரத யாத்திரைக்கு கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன் வரவேற்பு அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், நாகர்கோவில் நகரத் தலைவர் அலெக்ஸ், நிர்வாகிகள் ராஜஜெகன், ஜெரால்டு கென்னடி, ஆரல் முருகானந்தம், எஸ்.வைகுண்டதாஸ், ஆர்.எம்.டென்னிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.