சுடச்சுட

    

    பத்மநாபபுரம் நகராட்சியில் டெங்கு தினம் கடைப்பிடிப்பு

    By DIN  |   Published on : 17th May 2019 06:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பத்மநாபபுரம் நகராட்சியில்  பொது சுகாதார பிரிவின் மூலம் தேசிய டெங்கு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. 
    நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் மூர்த்தி தலைமை வகித்தார். நகர்ப்புற சுகாதார மைய  மருத்துவர் லாரன்ஸ் விக்டர் ஜோ, டெங்கு குறித்து பேசினார்.  
    ஆய்வாளர்கள், பணியாளர்கள் கடமைகள் குறித்து துப்புரவு ஆய்வாளர் ராஜாராம் விளக்கம் அளித்தார். பின்னர் ஆணையர் தலைமையில் டெங்கு  ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
    இதில், சுகாதார ஆய்வாளர் வீ.முத்துராமலிங்கம்,  பயிற்சி சுகாதார ஆய்வாளர் ராதிகா, சுகாதார மேற்பார்வையாளர்கள் மோகன், ஜோனி, மகப்பேறு உதவியாளர் சுபலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai