முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
குளச்சலில் 20 இல் மின்தடை
By DIN | Published On : 18th May 2019 04:37 AM | Last Updated : 18th May 2019 04:37 AM | அ+அ அ- |

குளச்சல் பகுதியில் திங்கள்கிழமை (மே 20) மின்தடை செய்யப்படுகிறது.
இது குறித்து, தமிழ்நாடு மின்சார வாரிய இரணியல் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
செம்பொன்விளை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மே 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செம்பொன்விளை, திக்கணங்கோடு, தெங்கன்குழி, மத்திக்கோடு, சாஸ்தான்கரை, சேனம்விளை, கொட்டில்பாடு, சைமன்காலனி, கீழக்கரை, குளச்சல், மிடலாக்காடு, பிடாகை, கோடிமுனை, ஆலஞ்சி, வாணியக்குடி, பத்தறை, குப்பியன்துறை, பாலப்பள்ளம், திங்கள்நகர், இரணியல், கண்டன்விளை, நெய்யூர், பட்டரிவிளை, தலக்குளம், ஆகிய இடங்களுக்கும் அதனைச் சார்ந்த துணை மின்நிலையங்களுக்கும் மின்விநியோகம் இருக்காது.
இதே போல் சேரமங்கலம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மே 20 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சேரமங்கலம், அழகன்பாறை, கருமண்கூடல், மண்டைக்காடு, லட்சுமிபுரம், நடுவூர்கரை, பரப்பற்று, மணவாளக்குறிச்சி, பிள்ளையார்கோயில், கடியப்பட்டினம், அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, வெள்ளிச்சந்தை, முட்டம், சக்கப்பத்து, ஆற்றின்கரை, சாத்தன்விளை, ஆலன்விளை, திருநயினார்குறிச்சி, குருந்தன்கோடு, கட்டிமாங்கோடு, ஆகிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.