Enable Javscript for better performance
சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ! 66 வயது மெக்கானிக்கின் கண்டுபிடிப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ! 66 வயது மெக்கானிக்கின் கண்டுபிடிப்பு

    By DIN  |   Published On : 27th May 2019 10:27 AM  |   Last Updated : 27th May 2019 10:27 AM  |  அ+அ அ-  |  

    தமிழகத்திலேயே முதல்முறையாக சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோவை வடிவமைத்துள்ளார் நாகர்கோவிலைச் சேர்ந்த  மெக்கானிக்.
    கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறை சேர்ந்தவர் முருகன் (66). ஒன்பதாம் வகுப்பு வரை பயின்றுள்ள இவர், ஆட்டோமொபைல் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். தற்போது நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் வசிக்கும் இவர், சூரியசக்தி மின்சாரம் மூலம் இயங்கும் ஆட்டோவை வடிவமைத்துள்ளார்.
    முருகனின் மகன் கண்ணன் மென்பொறியாளராக புரூனை நாட்டில் பணியாற்றி வருகிறார். முருகன் புரூனை சென்றிருந்தபோது அந்த நாட்டில் தெருவிளக்குகள் சூரியசக்தி மின்சாரத்தில் இயங்குவதைப் பார்த்து, அதில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நாகர்கோவில் திரும்பிய அவர், சூரியசக்தி குறித்து 7 ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டார். 
    பின்னர், சூரியசக்தி மின்சாரம் மூலம் இயங்கும் பல உபகரணங்களை உருவாக்கிய அவர், தற்போது சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோவை வடிவமைத்து சொந்த உபயோகத்துக்காக பயன்படுத்தி வருகிறார்.
    இதுகுறித்து முருகன் கூறியது: சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும் பல்வேறு உபகரணங்களை உருவாக்க முடியும். அதற்கு ஆகும் செலவும் குறைவு. முதலில் நாகர்கோவிலில் உள்ள எனது வீட்டுக்கு சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறையிலான சோலார் பேனலை உருவாக்கினேன். இதேபோல் கடையநல்லூரில் 2 வீடுகள் மற்றும் ஒரு கடைக்கு சூரியசக்தி மின்சாரம் வழங்கும் முறையை அறிமுகப்படுத்தினேன். தற்போது வரை நான் கண்டுபிடித்த சூரியசக்தியிலான மின்சார உபகரணங்கள் எந்தப் பழுதுமின்றி செயல்பட்டு வருகின்றன.
    எனது ஆர்வத்தைப் பார்த்த எனது மகன், எனக்கு சூரியசக்தி மின்சாரம் மூலம் இயங்குவதற்கான பொருள்களைத் தயாரிக்கும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையை வைத்து கொடுத்தார்.
    பின்னர், ரூ.15 ஆயிரத்துக்கு பழைய ஆட்டோ ஒன்றை வாங்கி அதில் சில மாற்றங்களை செய்தேன். பின்னர், சூரியசக்தியை ஈர்க்கும் 4 பேனல்கள் தயார் செய்து அதனை ஆட்டோவின் மேல்பகுதியில் பொருத்தினேன். மேலும், 48 வோல்ட், 160 ஆம்பியரில் இயங்கும் பேட்டரி  மற்றும் ஆயிரம் வோல்ட் திறன் கொண்ட மோட்டார் பொருத்தி அதனை சோலார் பேனலுடன் இணைத்தேன். இதற்கு மொத்தமாக  ரூ.60 ஆயிரம் செலவானது. இந்த ஆட்டோ பகலில் 140 கி.மீ. வரையும், இரவில் 70 கி.மீ. வரையும் இயங்கும்.
    கடந்த ஓராண்டாக நான் இந்த ஆட்டோவுக்கு எரிபொருள் மற்றும் பழுதுபார்ப்புக்கு என எந்தச் செலவும் செய்யவில்லை. எனது அடுத்த திட்டமாக சூரியசக்தி மின்சாரம் மூலம் இயங்கும் காரை வடிவமைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.
    எனது கண்டுபிடிப்புக்கு இதுவரை காப்புரிமைக்கு விண்ணப்பிக்கவில்லை. ஏனெனில் எதிர்கால சந்ததியினர் எந்தவித தடையுமில்லாமல் இத்திட்டத்தை பயன்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.
    சூரியசக்தி மின்சாரம் மூலம் வாகனங்கள் இயக்கப்படுவதால் ஒலி மாசு மற்றும் காற்று மாசு குறையும். உலகில் பல நாடுகள் சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தில் முன்னேறியுள்ளன. ஆனால், இந்தியாவில் இத்திட்டம் கடந்த 1985ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டும் இதுவரை பெரிய அளவில் மேம்படுத்தப்படவில்லை என்றார் அவர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp